முக்கியச் செய்திகள்

ஜேஇஇ முதன்மை தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு!

கொரோனா பரவல் எதிரொலியாக மே மாதம் 24ம் தேதி நடக்கவிருந்த ஜேஇஇ (main exam) முதன்மை தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.57 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3,449 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இரவு ஊடரங்கு, குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமான முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் எதிரொலியாக முதுகலை படிப்பிற்கான நீட் தேர்வு 4 மாதங்கள் வரை ஒத்திவைக்கப்படுவதாகப் பிரதமர் அலுவலகம் நேற்று அறிவித்தது.

பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வுகள் ஏப்ரல் 27,28,29 தேதிகளில் நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகள் மே 24,25,26,27,28ம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் கொரொனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மே 24ஆம் தேதி நடக்கவிருந்த ஜேஇஇ முதன்மை தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் மிண்டும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். ‘ கொரோனா பரவல் காரணமாக மே 24 ஆம் தேதி நடக்கவிருந்த ஜேஇஇ முதன்மை தேர்வுகள் மீண்டும் தள்ளிவைக்கப்படுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (official website of NTA) தொடர்ந்து கவனியுங்கள். தேர்வுக்கான மறுதேதி அறிவிக்கப்படுமாயின் அதில் பதிவேற்றப்படும்’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பதற்றத்தில் போலீஸ் தடுப்புகளை இடித்து தள்ளிய இளைஞர்!

Saravana Kumar

பைக் ஸ்டண்ட் செய்த இரு பெண்கள்… வைரலான வீடியோ!

Saravana Kumar

பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர்

Halley karthi