கேரளா துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – தேடுதல் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கேரளவில் அரசு மற்றும் ஆளுநர் இடையேயான மோதல் காரணமாக 2 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்க உச்ச நீதிமன்றம் தேடுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்ய மாநில அரசு தேர்வு பட்டியலை ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் ஆளுநர் ஆரிப் முகமது கான் அந்த பட்டியலை அவர் தவிர்த்து, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் சிவப்பிரசாத், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் சிசா தாமஸ் ஆகிய 2 பேரையும் தற்காலிக துணைவேந்தர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து கேரள அரசு மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் கேரள மாநிலத்துடன் கலந்தாலோசிக்காமல் தற்காலிக துணைவேந்தர்களை நியமித்த ஆளுநரின் உத்தரவை ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆளுநர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசு தரப்பில் வழங்கப்பட்ட 10 உறுப்பினர்கள், ஆளுநர் தரப்பில் வழங்கப்பட்ட பெயர்களில் இருந்து தகுதியான நபர்களை தேர்வு செய்து தேடுதல் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்த குழுவிற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதான்சு துலியா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நீதிபதிகள்  சுதான்சு துலியா 2 வாரத்தில் குழு உறுப்பினர்களை  முடிவு செய்வார்.அதன் பின்னர் விளம்பரம் வெளியிட்டு 4 வாரத்துக்குள் விண்ணப்பங்கள் பெற வேண்டும். 3 மாதத்துக்குள் நியமனங்களை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.