கேரளாவில் மலை இடுக்கில் 3 நாட்களாக சிக்கி தவித்த இளைஞரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.
பாலக்காட்டை சேர்ந்த பாபு என்ற இளைஞர், தனது 2 நண்பர்களுடன் மலப்புழாவின் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றுள்ளனர். மலையில் இருந்து பாபு இறங்கியபோது, பாறை இடுக்குகளுக்குள் பாபு தவறி விழுந்துள்ளார். அவரது நண்பர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியாமல்போனதால் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மலை ஏற்ற வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
#OP_Palakkad
In a spectacular action, highly qualified Teams of Indian Army have successfully rescued Mr Babu who slipped off a cliff & was stranded in a steep gorge for over 48 hours. The operation was coordinated by #DakshinBharatArea under the aegis of #SouthernCommand@adgpi pic.twitter.com/Pcksj6WEBS— Southern Command INDIAN ARMY (@IaSouthern) February 9, 2022
நீண்ட நேரத்திற்கு பிறகு இளைஞர் சிக்கியுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டும், அவரை மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தனர். இதனை தொடர்ந்து வெலிங்டன், பெங்களூரில் இருந்து வந்த மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள், மலை இடுக்கில் சிக்கி தவித்த இளைஞர் பாபுவை கயிறு மூலம் மீட்டனர். 46 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மலை உச்சிக்கு அழைத்துவரப்பட்ட இளைஞருக்கு தண்ணீர், உணவு வழங்கப்பட்டது.
இந்நிலையில், மலை உச்சியில் சிக்கி தவித்த இளைஞரை, இந்திய ராணுவ வீரர்கள் மீட்கும் பிரத்யேக காட்சிகள் வெளியாகி வைரலானது. தம்மை பத்திரமாக மீட்ட ராணுவ வீரர்களுக்கு முத்தமிட்டு இளைஞர் நன்றி கூறிய சம்பவம் நெகிழ்ச்சியூட்டுவதாக பலரும் தெரிவித்துவருகின்றனர்.







