முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் விலக்கு மசோதா; வைரமுத்து ட்விட்

நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவின் சட்ட முன் வடிவு நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

கடந்த வருடம் இயற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவினை ஆளுநர் ரவி கடந்த 1ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவருக்கு திருப்பி அனுப்பியிருந்தார். மசோதா திருப்பி அனுப்பிய விவகாரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த மசோதாவை மறுபடியும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவதென்று முடிவு அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கூட்டப்பட்டு நீட் மசோதாவிற்கான சட்ட முன் வரைவுக்கான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த முன்னெடுப்புக்கு பலதரப்பிலிருந்தும் ஆதரவும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.


அவரின் பதிவில் “ நீட் தேர்வு ஆளுநருக்கே திருப்பி அனுப்பி, இறையாண்மைக்குட்பட்டு, முறையாண்மை செய்திருக்கிறார் முதலமைச்சர்.
எடுத்தது கண்டார் , இற்றது கேட்டார். என்று விரைந்து வினைப்படுகிறார். முன்னோடிகளை முந்தும் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறார். நல்லது வாழ்க, நலமே சூழ்க.என்று பதிவு செய்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜெயிலர் வீட்டுக்குத் தீ – குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைப்பு

Web Editor

ஆப்கானில் ரஷ்ய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; 2 ரஷ்ய அதிகாரிகள் பலி

G SaravanaKumar

சுதந்திர தின கொண்டாட்டம்; தேசிய கொடி விற்பனை அதிகரிப்பு

G SaravanaKumar