கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் மண்ணுளி பாம்பு விற்கப்படுவதாக வனத் துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து திருட்டு கும்பலை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்று வனத்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் மண்ணுளி பாம்பு விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து கேரள வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த சொகுசு காரை கண்காணித்தனர்.
உஷாரான திருட்டு கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றனர். வனத்துறையினரும் சொகுசு காரை விடாமல் துரத்திக் கொண்டே இருந்தனர். சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சினிமா பாணியில் அதிரடியாக விரட்டிச் சென்ற தமிழகப் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணியை சேர்ந்த தங்கராஜ,டைட்டஸ் மற்றும் பாறசாலையை சேர்ந்த பினு ஆகியோர் என்பது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து மண்ணுளி பாம்பு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
-வேந்தன்