உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஆமையின் உருவத்தை தத்ரூபமாக வடித்துள்ளார்.
ஜூன் 5 – ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் 50-ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ’பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடி’ என்கிற கருப்பொருளை ஐக்கிய நாடுகள் சபை தேர்ந்தெடுத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை ஒட்டி புகழ்பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் மணலையும், 2320 பிளாஸ்டிக் பாட்டிகளையும் பயன்படுத்தி பிரமாண்ட ஆமை சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
தனி நபர்கள் தங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும், ஆரோக்யமான சூழலுக்கு பங்களிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த ஆமை சிற்பம் அமைக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.