தும்பிக்கை இன்றி சுற்றி வரும் ஒற்றை குட்டியானை-காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை!

கேரளா மாநிலம் திருச்சூர் வனப்பகுதியில் யானைக்கூட்டத்தின் நடுவே தும்பிக்கையின்றி சுற்றிவரும் ஒற்றை காட்டுயானை குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள ஆதிரப்பள்ளி வனப்பகுதியில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இங்கு…

கேரளா மாநிலம் திருச்சூர் வனப்பகுதியில் யானைக்கூட்டத்தின் நடுவே தும்பிக்கையின்றி சுற்றிவரும் ஒற்றை காட்டுயானை குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள ஆதிரப்பள்ளி வனப்பகுதியில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இங்கு தோட்ட பராமரிப்பு மற்றும் ரப்பர் வடிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் வழக்கம்போல் சில நாட்களுக்கு முன்னர் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த போது யானை கூட்டம் ஒன்று ரப்பர் தோட்டப் பகுதியில் புகுந்தது.இதனைப் பார்த்ததும் அவர்கள் அலறியடித்து ஓடத் துவங்கினர்.அப்போது அந்த யானைக்கூட்டத்தில் ஒரு யானைகுட்டி மட்டும் தும்பிக்கை இன்றி வலம் வந்துள்ளது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.துரிதமாக அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் அந்த யானை குட்டி எங்கே செல்கிறது என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் அந்த யானை குட்டிக்கு பிறவியிலேயே தந்தம் ஏதுமின்றி பிறந்ததா?அல்லது வேறு ஏதேனும் விபத்தினால் தந்தத்தை இழந்ததா என்ற கோணங்களிலும்
விசாரணை நடத்தி வருகின்றனர்.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.