புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய ஊத்தாகுத்து மீன்பிடி திருவிழாவில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
தமிழகத்தின் புதுக்கோட்டை,சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும் ஊத்தாகுத்து மீன்பிடி திருவிழா நடைபெற்று வருகின்றது.அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் வெகு சிறப்பாக இப்போட்டி நடத்தப்பட்டது.
கண்டியாநத்தம் கிரமத்திலுள்ள ஊமையன் கண்மாயில் ஊர் நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொள்வதெற்கென சுற்று வட்டார கிராமங்களை
சேர்ந்த ஏராளமானவர்கள் காலை முதலே வரத் தொடங்கினர்.போட்டியில் பங்குபெற விருப்பம் தெரிவித்த போட்டியாளர்களிடம் இருந்து ஒரு ஊத்தாகுத்து மீன்பிடி உபகரணத்திற்கு குறிப்பட்ட தொகை நுழைவுக்கட்டணமாக பெறப்பட்டது.
போட்டி தொடங்கியதும் ஆர்வமுடன் காத்திருந்த போட்டியாளர்கள் க்ண்மாயில் இறங்கி ஊத்தாவை வைத்து கண்மாயில் இருந்த நாட்டு வகை மீன்களான கட்லா, ஜிலேபி, கெண்டை உள்ளிடவற்றை ஆர்வமுடன் பிடித்தனர்.திரண்டிருந்த பொதுமக்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
—வேந்தன்







