கீழடி அருங்காட்சியக பணிகள் விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

கீழடியில் அருங்காட்சியகத்தின் கட்டடப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை, அமைச்சர்கள் எ.வ.வேலு , பழனிவேல் தியாகராஜன், பெரியகருப்பன்,…

கீழடியில் அருங்காட்சியகத்தின் கட்டடப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை, அமைச்சர்கள் எ.வ.வேலு , பழனிவேல் தியாகராஜன், பெரியகருப்பன், மூர்த்தி, ஆகியோர் நேரில் ஆய்வு செய்தார்கள். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு,“ 31 ஆயிரம் சதுர அடியில் கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருவதாகவும், தற்போது 17 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. அருங்காட்சியகம் கட்டி முடித்த உடன் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படும் என தெரிவித்த அவர், கீழடி அருங்காட்சியக வடிவமைப்புகள், மாற்றம் செய்யப்படாது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.