நடிகர் அஜித்தின் அதிரடி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் “வலிமை”. இந்தி நடிகை ஹூமா குரேஸி ஹீரோயினாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை, போனி கபூர் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக தயாரிப்பில் உள்ள இந்தப் படம் குறித்த அப்டேட்டை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் ஆரம்பித்து அரசியல் கூட்டங்கள், வலிமை திரைப்படத்தின் தயரிப்பாளரான போனிகபூர் ட்விட்டர் பதிவுகள், பிரதமர் சென்னை வருகைவரை, வலிமை அப்டேட் கேட்டு ரணகள ரகளையில் ஈடுபட்டார்கள், அஜித் ரசிகர்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிப்ரவரி 15 ஆம் தேதி நடிகர் அஜித்திடம் இருந்து வலிமை அப்டேட் வந்தது. ஆனால் அது ரசிகர்களுக்கு ஏமாற்றைத்தையே தந்தது. தனது ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் அரசு, அரசியல், விளையாட்டு சார்ந்த இடங்களில் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என கேட்கும் செயல் தனக்கு வருத்ததை அளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார் அஜித். வலிமை படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பாளருடன் கலந்து ஆலோசனை செய்து உரிய நேரத்தில் நிர்ணயம் செய்யப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்று வரை தயாரிப்பாளர்களிடமிருந்து எந்த அப்டேட்டும் வரவில்லை. இருப்பினும், இந்த தாமதத்திற்கு வலுவான காரணம் உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
திரைப்படத்தின் வெளியீட்டு தேதியுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட, ‘வலிமை’ தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சரியான நேரத்திற்காக பொறுமை காக்கின்றனர் என்றும், அஜித் ரசிகர்களுக்கு இது டபுள் டமாக்கா கொண்டாட்டமாக அமையப்போகிறது என்றும் செய்திகள் வெளியாகிறது.
மேலும் தல அஜித்தை திரையில் காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அஜித் ரசிகர்கள் என்றாலே ட்விட்டரில் உலகளவில் ஹாஸ்டாக் ட்ரெண்ட் செய்து விடுவார்கள். இந்த அப்டேட் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் வெளியீடு உலகளவில் ட்ரெண்ட் ஆக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.