முக்கியச் செய்திகள் இந்தியா

பெண்களுக்கான நகல் கொள்கை – கே.பாலகிருஷ்ணன் ஆலோசனை

பெண்களுக்கான நகல் கொள்கையில் சில ஆலோசனைகளை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருக்கும், துறை செயலாளருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ளார்.

தமிழக அரசின் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் தமிழகப் பெண்களுக்கான நகல் கொள்கை குறிப்பு சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. பல்வேறு துறை
சார்ந்த வல்லுநர்கள் மற்றும் மகளிர் அமைப்புகளைக் கலந்தாலோசித்து இதனைத் தயாரித்திருப்பது வரவேற்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டியது.
இந்நிலையில், இந்த நகல் கொள்கைகளின் மீது உள்ள சில ஆலோசனைகளை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருக்கும், துறை செயலாளருக்கும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ளார்.

அதில் குறிப்பிட்டிருக்கும் ஆலோசனைகள் பின்வருமாறு,

 • பாலியல் வழக்குகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிப்பதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
 • அமலாக்கம் என்று வரும்போது சமூக, பொருளாதார, அரசியல், உளவியல் தளங்கள் குறிப்பிடப்படுகின்றன. இதில், பண்பாட்டுத் தளத்தையும் இணைத்துக் கொள்ள
  வேண்டும். பெண்கள் குறித்த ஆணாதிக்க மற்றும் பிற்போக்கு கண்ணோட்டம் சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் விரவிக்கிடக்கின்ற சூழல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட
  வேண்டும்.
 • பாலியல் தொழிலாளர்கள் என்று வரும் இடத்தில் எல்லாம் பாலியல் வணிகத்தில் தள்ளப்பட்ட பெண்கள் என வருவது பொருத்தமானது. அது ஒரு தொழில் என்கிற
  கண்ணோட்டம் மாற்றப்பட வேண்டும் எனக் கருதுகிறோம். பெண்கள், பெண் குழந்தைகள் என வரும் இடங்களில் திருநர் என்பதையும் இணைத்திட வேண்டும்.
  பாதிக்கப்பட்டவர் (victim) என்பதற்கு பதிலாக குற்றத்தை எதிர்கொண்டவர்கள் (survivor) எனப் பொருள்படும் பதத்தைப் பிரயோகிக்கலாம்.
 • தேசிய சராசரியைவிட குறைவான பாலின விகிதாச்சாரம் நிலவுவதை மறுக்க முடியாது. இதை உயர்த்துவதற்கான சரியான திசைவழி, கொள்கையின் முக்கிய பகுதியாக
  அமைய வேண்டும். பட்டியலின, பழங்குடியின பெண்களுக்கான திட்டங்கள், நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். நிலமற்றோருக்கு நில விநியோகம்,
  அதிலும் குறிப்பாக பெண்கள் பெயரில் நில விநியோகம் என்பது அரசின் நிகழ்ச்சி நிரலில் மீண்டும் இடம்பெற வேண்டும்.
 • கல்விக்கூடங்கள், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வன்முறைகள் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் பிரச்சினைகளை கையாளும்
  அதிகாரிகளின் அணுகுமுறை குறித்து ஆண்டுக்கு ஒருமுறை பாலின நிகர்நிலை தணிக்கை மேற்கொள்ள வேண்டும். இணையதளக் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு
  போதுமான முக்கியத்துவம் கொள்கைக் குறிப்பில் கொடுக்கப்படவில்லை.
 • சம வேலைக்கு சம ஊதியம்சட்டத்தை அனைத்துத் துறைகளிலும் அமல்படுத்த வேண்டும். பல்வேறு அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகள், ஜனநாயக இயக்கங்கள்,
  தனிநபர்கள் சார்பில் வரும் கருத்துகளை பொருத்தமான முறையில் இணைத்துக் கொண்டு இக்கொள்கையை செழுமைப்படுத்த வேண்டும்.

மேலும், இந்த நகல் கொள்கையில் பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இது வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல் சட்டமாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வளியுறுத்தியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

செங்கோட்டையில் போலீசார் விரட்டி, விரட்டி தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ!

Nandhakumar

பத்தாண்டு காலமாக செய்யாததையா தற்போது அதிமுக செய்துவிடப்போகிறது: உதயநிதி ஸ்டாலின்!

Saravana Kumar

இந்தியா கொரோனா; நேற்றைய பாதிப்பை விட இன்று 12% அதிகம்

Halley Karthik