எம்.ஒய் 22 இஸட் 900 பைகின் புதிய வண்ணத்தை அறிமுகம் செய்துள்ளது கவாஸகி நிறுவனம்.
1970-களில் விற்பனையில் இருந்த கவாஸகி இஸட் பைக்கின் பாரம்பரியத்தை தழுவி வடிவமைக்கப்பட்ட நவீன கால மாடல்தான் இஸட் 900 பைக். அதில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வு வழங்கும் விதத்தில், புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்துள்ளது கவாஸகி நிறுவனம்.
எலுமிச்சை பச்சை மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த புதிய பைக், வாடிக்கையாளர்களை உடனடியாக கவரும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு முன் வந்த வண்ணங்களில் இருந்து சற்று மாறுபட்டு வித்தியாசமான வண்ணத்தில் இருப்பதால் அதிகபடியான வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பைக் 948சி.சி திறன் கொண்ட நான்கு சிலிண்டர் எஜ்ஜினையும், உறுதி மிக்க பிரேமையும், அதிக வெளிச்சம் கொடுக்கும் எல்.இ.டி விளக்கு ஆகியவற்றை கொண்டுள்ளது. டிராக்சன் கன்ட்ரோல், மொபைல் போன் இணைப்பு வசதி ஆகியவையும் இதில் உள்ளது.
மற்ற நிறுவனங்களின் பக்குகளை விட, வித்தியாசமான பைக்குகளை வழங்க வேண்டும் என்பதில், உறுதியாக உள்ளது கவாஸகி நிறுவனம் அதற்கு ஏற்ப தற்போது, புதிய வண்ணத்தில், சீறிப்பாயும் கவாஸகி இஸட் 900 பைக்கை அறிமுகம் செய்துள்ளது.








