மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து அதிமுக தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சேஷசாயி, கடந்த நவம்பர் 24-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பரேஷ் உபாத்யாய் அடங்கிய அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது. இந்நிலையில், மேல் முறையீட்டு வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.