முக்கியச் செய்திகள்

கச்சத்தீவை மீட்பது பாஜகவின் கொள்கை: சி.பி.ராதாகிருஷ்ணன்

கச்சத்தீவை மீட்பது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மின்தடைக்கு மத்திய அரசை திமுகவினர் குறை கூறுகின்றனர். மத்திய அரசு நிலக்கரி அனுப்புவதில்லை என்கின்றனர். நிலக்கரிக்கு மாநில அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் புதிய திட்டங்களைத் தொடங்கி தொழில் வளர்ச்சியை மேம்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும். மின்வெட்டு என்பது திமுகவுடன் ஒட்டிப் பிறந்தது. திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டும் வந்துவிடும்

தமிழைப் போன்று சமஸ்கிருதமும் உன்னதமான மொழிகளில் ஒன்று. 45 நாட்களில் பஞ்சு இறக்குமதி அதிகமாகும். பஞ்சின் விலையைக் கட்டுப்படுத்தவும், கட்டுக்குள் கொண்டு வரவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இலங்கைத் தமிழர்களின் நலனில் பாஜக எப்போதும் அக்கறை கொண்டுள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கச்சத் தீவை மீட்பது பாஜகவின் கொள்கைகளில் ஒன்று. மிக விரைவில் கச்சத்தீவு இந்திய எல்லைக்குள் ஒன்றாகும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி, மாவட்டத் தலைவர் செந்தில்குமார், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை: முதலமைச்சர் வழங்கினார்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாப்பிள்ளை உயிரிழப்பு

Web Editor

பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்-பள்ளி கல்வித் துறை உத்தரவு

Web Editor