திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிலையம் அமைக்க முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. 4 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின்னர் இன்று கூடும் சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளதாகவும், அமைச்சர்கள் சேகர் பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் விவாதங்களுக்கு பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று கூடிய சட்டப்பேரவையில், வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணைப் பகுதியில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் துவங்க வேண்டும் என்றும், உள்நாட்டு மீன்வளர்ப்பில் சிறந்த இடமாக விளங்குவதால் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்’
இதற்கு பதிலளித்து பேசிய மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீன்வளக்கல்லூரி கட்டுவதற்கு 65 ஏக்கர் நிலம், உட்கட்டமைப்பு, ஊதியம் என்று ரூ.110 கோடி வரை நிதி தேவைப்படுவதாகவும், தமிழ்நாட்டில் மீன்வள கல்லூரிகள் தூத்துக்குடி, மண்டபம், நாகப்பட்டினம், தலைஞாயிறு, பொன்னேரி, மாதவரம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருவதாகவும், இந்த கல்லூரிகளில் அனைத்து மாவட்டங்களை சார்ந்த மாணவர்களும் படித்து வருவதாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடல் வளத்தை சார்ந்து மாணவர்கள் படிக்க இயலாது என்பதால் உள்நாட்டு மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் அமைக்க முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.