யாருக்கும் போட்டியாக காசி யாத்திரை ஏற்பாடு செய்யப்படவில்லை- அமைச்சர் சேகர்பாபு

தமிழக பக்தர்கள் காசிக்கு அழைத்து செல்லப்பட்டது ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம். இது யாருக்கும் போட்டியாக ஏற்பாடு செய்யவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கடந்தாண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது அறநிலையத்துறை சார்பில் ரூ.50 லட்சம்…

தமிழக பக்தர்கள் காசிக்கு அழைத்து செல்லப்பட்டது ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம். இது யாருக்கும் போட்டியாக ஏற்பாடு செய்யவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கடந்தாண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது அறநிலையத்துறை சார்பில் ரூ.50 லட்சம் செலவில் 200 பேர் காசிக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் 200 பேர் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக 66 பேர் கடந்த 22ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து காசி அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிக்கவும்: ஈரோடு அம்மன் கோயில் திருவிழா: பக்தர்களே அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு!

காசி சென்ற குழுவினர் இன்றைய தினம் சென்னை எழும்பூர் நிலையம் வந்தபோது
அமைச்சர் சேகர்பாபு பக்தர்களை வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை சார்பில் முதற்கட்டமாக 66 பேர் காசி பயணம் சென்று காசியில் நீராடி தமிழகம் திரும்பி உள்ளனர். அடுத்த கட்ட பயணம் மார்ச் 1 மற்றும் 8 ம் தேதி அழைத்துச் செல்லப்படுவார்கள்.
யாருக்கும் போட்டியாக அறநிலையத்துறை சார்பில் காசி பயணம் ஏற்பாடு செய்யப்படவில்லை. கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் காசி புனித பயணம். தமிழக அரசுக்கு போட்டியாக தான் காசி தமிழ் சங்கமம் ஏற்பாடு
செய்திருக்கலாமே தவிர தமிழக அரசு யாருக்கும் போட்டி அல்ல என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.