கரூர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீரமங்கை வேலுநாச்சியார்,
கல்பனாசாவ்லா, பாரதமாதா, காரைக்கால் அம்மையார் ஆகியோரின் மாறுவேடம் அணிந்த கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலகமெங்கும் சர்வதேச மகளிர் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி
கரூர் சாரதா மகளிர் கல்லூரி சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார், கல்பனாசாவ்லா,
பாரதமாதா, காரைக்கால் அம்மையார், சரோஜினி நாயுடு, சாரதா தேவி, ஜான்சிராணி,
ஆண்டாள், கண்ணகி உள்ளிட்ட பல்வேறு பெண் போராளிகள் மற்றும் பெண்ணுரிமைக்காக
பாடுபட்டவர்களின் மாறுவேடம் அணிந்த கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு
பேரணி நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கிய இந்த
விழிப்புணர்வு பேரணி மனோகரா கார்னர், திண்ணப்பா கார்னர், சர்ச் கார்னர், ஜவகர்
பஜார், தலைமை தபால் நிலையம் வழியாக மீண்டும் திருவள்ளுவர் மைதானத்தை
வந்தடைந்தது.

பெண்கள் பொது இடங்களில் எந்தவித நிபந்தனையும் இன்றி தங்களது அடிப்படை உரிமைகளை பயன்படுத்த வழக்காடுதல், பொது இடங்களில் பெண்களை பாதிக்கும் வழிமுறைகளைநெறிப்படுத்துதல், பொது இடங்களில் பெண்கள் மற்றும் நலிவுற்றோரை பற்றிய தவறானசிந்தனையை மாற்றுதல், இரவு நேரங்களில் சாலைகளில் பெண்களின் பாதுகாப்பு, சமுதாயத்தில் பெண்கள் பாதிக்கப்படும் போது அவர்களை பாதிக்கப்பட்ட சிந்தனையில்இருந்து மீட்டெடுத்து பாதுகாப்பு கொடுத்தல், பெண்கல்வி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுத்தல் போன்றவை குறித்து கோசங்களை எழுப்பியவாறு
விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டனர்.







