கரூர் : பள்ளி மாணவியை ஏமாற்றிய நபர் போக்சோ சட்டத்தில் கைது

குளித்தலை அருகே பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகூறி கர்ப்பமாக்கிய நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மாயனூர் உள்வீரராக்கியம் பகுதியில் பத்தாம்…

குளித்தலை அருகே பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகூறி கர்ப்பமாக்கிய நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மாயனூர் உள்வீரராக்கியம் பகுதியில் பத்தாம்
வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். கிருஷ்ணராயபுரம் மணவாசி தெற்கு தெருவைச் சேர்ந்த மல்லீஸ்(எ)மல்லீஸ்வரன், இந்த மாணவியிடம் தான் காதலிப்பதாகக் கூறி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வரச்சொல்லி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கரூர் மருத்துவக்
கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. பின்னர் சிறுமியிடம் புகார் மனு பெறப்பட்டு, மல்லீஸ்வரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து குளித்தலை போலீசார் மல்லீஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.