பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா(90) நேற்று காலமானார். சாலமன் பாப்பையாவுக்கு உடல் நல குறைவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாலமன் பாப்பையா நேற்று காலமானார்.
1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழ்ப் பட்டிமன்றங்களை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். தனது பாமரத்தனமான நகைச்சுவை, எளிய தமிழ் மற்றும் அனுபவமிக்க நடுவர் திறமையால் பல தலைமுறை மக்களைக் கவர்ந்தவர். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி, தமிழ்த் தொண்டாற்றிய இவர், பல தமிழ் நூல்களையும், உரைகளையும் எழுதியுள்ளார். அவரது மறைவுக்குப் பல்துறைச் சார்ந்த பிரபலங்களும், தமிழார்வலர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்னர்.
சாலமன் பாப்பையாவின் உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. “Guard of honour” எனப்படும் கௌரவ மரியாதை மட்டும் அளிக்கப்பட்டது. மதுரை தத்தனேரி மின் மயான வளாகத்தில், வயது முதிர்வு காரணமாக காலமான பத்மஸ்ரீ பேராசிரியர் சாலமன் பாப்பையா உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து சாலமன் பாப்பையா உடல் தகனம் செய்யப்பட்டது.




