தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வருகின்ற அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிக்குழுவும், பணிகளைக் கண்காணிக்க தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
தேர்தல் கண்காணிப்பாளர்கள்:
- அமைச்சர் N. ஆனந்த்
- அமைச்சர் K.A. செங்கோட்டையன்
- அமைச்சர் CTR நிர்மல் குமார்
தேர்தல் பணிக்குழு
35-மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி.
பொறுப்பாளர்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
இணைப் பொறுப்பாளர்கள்:
- அமைச்சர் ராஜ்குமார்
- அமைச்சர் தென்னரசு
- அமைச்சர் வினோத்
துணைப் பொறுப்பாளர்கள்:
- சரவணமூர்த்தி MLA, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி
- தியாகராஜன் MLA, செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி
- விஜயராஜ் MLA, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி
- காமாட்சி MLA, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி
5.பாலாஜி (எ) மணிகண்டன் செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
101-தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி:
பொறுப்பாளர்: அமைச்சர் அருண்ராஜ்
இணைப் பொறுப்பாளர்கள்:
- அமைச்சர் விஜய் பாலாஜி
- அமைச்சர் விஜயலட்சுமி
- அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
துணைப் பொறுப்பாளர்கள்:
- பாலமுருகன் MLA, திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி
- சத்தியபாமா MLA, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி
3.ராம்குமார் MLA, பல்லடம் சட்டமன்றத் தொகுதி - திலீப் MLA, நாமக்கல் சட்டமன்றத் தொகுதி
- சத்யா MLA, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி
மேற்கண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள், இரண்டு தொகுதிகளின் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பார்கள்.
அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வெற்றிச் சின்னமாம் விசில் சின்னம், மீண்டும் வாகை சூட வேண்டும். இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதிகளில் நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.




