‘கருப்பு’ பட டிரெய்லர் அப்டேட்…!

கருப்பு திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் ஒன்றை ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ளார்.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ’கருப்பு’. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, சுவாசிகா, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாய் அபயங்கர் இசைமைக்கும் இப்படத்திலிருந்து இதுவரை வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கருப்பு திரைப்படம் இம்மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் படத்தின் வெளியீட்டு பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கருப்பு படத்தின் டிரெய்லர் தயாராகி வருவதாக கூறியுள்ளார்.

 

இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.