கருணாநிதி பிறந்தநாள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 103 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி மெரினாவில் உள்ள கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் நினைவிடத்தில் ‘புத்தெழுச்சி நாள் விழா – அகவை 103’ என்கிற வாசகத்துடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தி.மு.க. இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. இந்த 3 தலைவர்களின் சிலைகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.