கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கனிமொழி!

தனது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கட்சியினரின் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டார். திமுக நாடாளுமன்ற குழு தலைவராகவும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி…

தனது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கட்சியினரின் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டார்.

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகவும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று தனது 53ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது தந்தை கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்திய கனிமொழி, திமுக தலைவர் ஸ்டாலினிடமும் வாழ்த்துப்பெற்றார்.

சி.ஐ.டி காலனியில் உள்ள கனிமொழி இல்லத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த திமுகவினர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply