செய்திகள்

கொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோக திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்!

கொச்சி – மங்களூரு இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தின் மூலம் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் பொருளாதாரம் உயரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடகாவின் மங்களூரு வரையிலான 450 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் இருமாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் பெருமிதம் என கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்றைய தினம் நாட்டிற்கு மிகவும் முக்கியமான நாள் என தெரிவித்த அவர், குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகா மாநில மக்களுக்கு இன்றியமையாத நாளாகும் என குறிப்பிட்டார். இந்த திட்டத்தால் இரு மாந்லங்களின் பொருளாதாரம் உயரும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி அமைய அமமுகவிற்கு வாக்களியுங்கள் : டிடிவி தினகரன்

Halley Karthik

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது – பிரேமலதா விஜயகாந்த்

Web Editor

விஜய் – அஜீத் சந்திப்பு அந்த நாட்டுல நடக்குதாமே?

Gayathri Venkatesan

Leave a Reply