பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் விழாவின் முக்கிய நிகழ்வாக 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அருணாசலேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இங்கே 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் தனித்தனி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19-ஆம் தேதி அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் கருவறையில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை மீது மகாதீபமும் ஏற்றப்படும்.
இந்நிலையில், கார்த்திகை தீபத் விழாவின் முக்கிய நிகழ்வாக 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் இன்று அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது.