மழை காரணமாக அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவுகள் வழங்கப்படுகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மழை முடியும்வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், மாநகராட்சி சார்பில் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும், அதற்கென உள்ள சமையல்கூடத்தில் சமைத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்று மழை காரணமாக அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவுகள் வழங்கப்படுகிறது. இதனால், வழக்கத்தை காட்டிலும் அம்மா உணவகத்திற்கு வரும் பொது மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இலவசமாக உணவு வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.







