யோகி பாபுவின் ‘கெனத்த காணோம்’ பட டிரெய்லரை வெளியிடும் கார்த்தி……….!

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘கெனத்த காணோம்’ என்னும் புதிய படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள யோகி பாபு,  கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ‘கெனத்த காணோம்’ என்னும் புதிய படத்தில் அவர் நடித்துள்ளார். ‘ஒரு கிடாவின் கருணை மனு’, ‘சத்ய சோதனை’ போன்ற படங்களை இயக்கியிருந்த சுரேஷ் சங்கையா தனது மறைவிற்கு முன் இயக்கிய படம் இதுவாகும்.

ஆர்.பி. டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் லவ்லின் சந்திரசேகர், ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

இந்நிலையில், ‘கெணத்த காணோம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன் அதன் படி இப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.