வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (நவம்பர் 14, 2026) காலை 05:30 மணி (இந்திய திட்ட நேரம்) நிலவரப்படி, அதே பகுதியில் ‘தீவிரமடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி’யாக (Well Marked Low Pressure Area) மாறியுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து, இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16-ஆம் தேதி மாலை வாக்கில் மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு ‘அக்வான்’ புயல் பெயரிடப்படும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




