ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடக பாஜக அமைச்சர் பதவி விலகல்

கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி இளம் பெண்ணுடனான ஆபாச வீடியோ உள்ளூர் செய்தி சேனலில் வெளியானதைத் தொடர்ந்து தன்னுடைய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். கர்நாடாக நீர்வளத் துறை அமைச்சர் ரமேஷ்…

கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி இளம் பெண்ணுடனான ஆபாச வீடியோ உள்ளூர் செய்தி சேனலில் வெளியானதைத் தொடர்ந்து தன்னுடைய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடாக நீர்வளத் துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி (60) உள்ளார். இவர் இளம்பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவருடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படும் ஆபாச வீடியோ உள்ளூர் செய்தி சேனலில் ஒளிப்பரப்புச் செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் தினேஷ் கலாஹள்ளி பெங்களூருவில் உள்ள கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து ரமேஷ் ஜர்கிஹோலி இன்று தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முதல்வர் எடியூரப்பாவுக்கு அனுப்பியுள்ளார். “என் மீதான குற்றச்சாட்டில் உன்மையில்லை. இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவேண்டும். அப்போது நான் குற்றமற்றவன் என நிரூபனமாகும் என்ற நம்பிக்கை உள்ளது” என தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அன்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியின் ஆபாச வீடியோ பாஜக தலைமையில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையெடுத்து அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.