மீண்டும் களமிறங்கும் சைக்கிள்?

தேர்தல் ஆணையம் சைக்கிள் சின்னத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். எதிர்க்கட்சியின்…

தேர்தல் ஆணையம் சைக்கிள் சின்னத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். எதிர்க்கட்சியின் பொய் வாக்குறுதிகள் அதிமுக வின் வாக்குறுதிகளிடம் தோற்றுப்போகும் என்ற அவர், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகக் கூறினார்.

தேர்தல் வெற்றி வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், எத்தனை புதிய அணிகள் உருவானாலும் முதன்மையான அதிமுக அணியே வெல்லும் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.