3 வது டெஸ்ட்: 432 ரன்கள் குவித்து இங்கிலாந்து ஆல் அவுட், 354 ரன்கள் முன்னிலை

இந்தியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, 432 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில்…

இந்தியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, 432 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 78 ரன்னில் சுருண்டது.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத் தியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும் ஹசீப் ஹமீத் 68 ரன்களும் டேவிட் மலான் 70 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஜோ ரூட் 121 ரன்கள் எடுத் தார். 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 423 ரன்கள் குவித்து, 345 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது அந்த அணி. 3 ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

9 ரன்கள் சேர்ந்த நிலையில், இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. இங்கிலாந்து அணி 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா, சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தனது 2 வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. ரோகித் சர்மாவும் கே.எல்.ராகுலும் நிதானமாக ஆடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.