நடிகை மீரா மிதுன் நீதிமன்ற காவல் செப்.9 வரை நீட்டிப்பு

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 9 ம் தேதி வரை, நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி சமூக…

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 9 ம் தேதி வரை, நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் நடிகை மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள் ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி கேரளாவில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுள்ளது என்றும் அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் இவர்களுடைய நீதிமன்ற காவலை, செப்டம்பர் 9 ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.