விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம்!

பொன்னேரியில் சோழ மன்னன் கரிகாலன் கட்டிய பழமை வாய்ந்த அருள்மிகு கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருஆயர்பாடியில் சோழ மன்னன் கரிகாலன் கட்டிய…

பொன்னேரியில் சோழ மன்னன் கரிகாலன் கட்டிய பழமை வாய்ந்த அருள்மிகு கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருஆயர்பாடியில் சோழ மன்னன் கரிகாலன் கட்டிய பழைமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்யவல்லி தயார் சமேத கரி கிருஷ்ணன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இக் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக கடந்த 8 ஆம் தேதி கோயிலில்
அரி,அரன் ஆகிய சிவனும், பெருமாளும் நேருக்குநேர் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கரிகிருஷ்ண பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி தாயார் உடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந் நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

—-கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.