முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இடம் அபகரிப்பு

காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இடத்தை அபகரிக்க முயற்சி செய்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை கோட்டை பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவர் 15 வருடங்களுக்கு முன்பு வாங்கிய 4.5 சென்ட் இடத்தை முள் வேலி அமைத்து பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி சித்ரா அமைத்துள்ள முள் வேலியை அகற்றி விட்டு, அந்த இடத்தில் வேறு நபர்கள் கல்லு கால் வேலி அமைத்தனர்.

இது குறித்து சித்ரா அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், போலி ஆவணங்கள் தயார் செய்து அதன் மூலம் இடத்தை அபகரிக்க நினைத்த சங்கராபுரம் பஞ்சாயத்து பொறுப்பு தலைவர் பாண்டியராஜன், ரஞ்சித் குமார், சந்தோஷ், கைலாசம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

மலை உச்சியில் பூஜை: தவறி விழுந்து உயிரிழந்த பூசாரி

Gayathri Venkatesan

இன்ஸ்டா பழக்கம்.. நடுரோட்டில் கல்லூரி மாணவி சரமாரி குத்திக் கொலை.. காதலன் வெறிச்செயல்

Gayathri Venkatesan

பெண்களை ஈவ் டீசிங் செய்த இளைஞர்: தட்டிக்கேட்ட நபருக்கு கத்திக்குத்து!

Jayapriya