ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு இடஒதுக்கீடு முறை வரவேற்கத்தக்கது: அமைச்சர் மெய்யநாதன்

2024 ஒலிம்பிக் கமிட்டியில் 30 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து இருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும்…

2024 ஒலிம்பிக் கமிட்டியில் 30 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து இருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆட்சியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் சார்பில் மாணவர்களுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும், அந்த முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் விரைவில் தெரிவிப்பார் என்றும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேரில் 5 பெண்கள் இடம் பெற்று இருப்பது பெருமைக்குரிய செயல் எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர், மாவட்டந்தோறும் உள்ள விளையாட்டு மைதானங்களில், விளையாட்டு பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.