திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ராஜலட்சுமி, காவல்துறையினரிடம் அளித்த புகாரில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், பெண்கள் குறித்தும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவதூறாக பேசுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மீது, 4 பிரிவுகளின் கீழ் சென்னையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவதூறு பரப்புதல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: