2006ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்,பாடகர், பாடலாசிரியர் என சினிமா துறையில் இருக்கும் அனைத்து பிரிவுகளையும் கற்றுத்தேர்ந்த பன்முக திறமை கொண்டவர் கமல்ஹாசன். கிட்டதட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வரும் அவர் இந்திய முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு பக்கம் அரசியல், மறுபக்கம் பிக்பாஸ், இன்னொரு பக்கம் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என கமல் தொடர்ந்து பரபரப்பான சூழலிலே இருந்து வருகிறார். இதனிடையே 2006ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ம் வெளியான இந்த படத்தில் கமாலினி முகர்ஜி, ஜோதிகா, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தொடர்ச்சியாக பெண்கள் கொலை, அதனை விசாரித்து உண்மையை தன் பாணியில் கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி என க்ரைம் த்ரில்லர் கதையில் காதலும் இப்படத்தில் அமையப்பெற்றிருக்கும். இந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களை வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 16 ஆண்டுகள் கழித்து நவீன மெருகூட்டலுடன் வேட்டையாடு விளையாடு படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சென்னையில் வெளியான திரைகளில் காலைக்காட்சியில் ரசிகர்கள் கொண்டாட்டமாக கண்டுகளித்தனர்.