”வரும் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதே இலக்கு” – மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எதிர்கட்சிகளின் ஒட்டுமொத்த இலக்கு என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். வரும் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரே அணியாக…

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எதிர்கட்சிகளின் ஒட்டுமொத்த இலக்கு என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

வரும் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரே அணியாக இணைந்து எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பட்னாவில் இன்று நடைபெற்றது. அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான், ஹேமந்த் சோரன் மற்றும் சரத்பவார், லாலுபிரசாத், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, உமர் அப்துல்லா , சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. ஆலோசனைக்கூட்டம் முடிந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சிகள் இணைந்து எதிர்கொள்வது தொடர்பான பொதுக் கருத்து அடுத்த மாதத்தில் இறுதி செய்யப்படும். எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் ஜூலை 10 அல்லது 12-ம் தேதி சிம்லாவில் நடைபெற உள்ளது. பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எதிர்கட்சிகளின் ஒட்டுமொத்த இலக்கு” இவ்வாறு கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.