கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள புகழ்பெற்ற மலர் சந்தையில் பூக்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பூ விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென்தமிழகத்தில் உள்ள பூச்சந்தைகளில் முக்கியமானது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தையாகும்.இங்கிருந்து பூக்கள் மதுரை, திண்டுக்கல் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்,நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் மாதமான ஆடி பிறந்துள்ளதால் தமிழர்கள் கல்யாணம் மற்றும் இதர விஷேசங்களை இம்மாதத்தில் வைப்பது இல்லை. பெரும்பாலும் ஆடி மாதங்களில் தமிழகத்தில் கோயில் திருவிழாக்கள் மட்டுமே நடைபெறும்.இதனால் மக்கள் மத்தியில் பூக்கள் மீதான நாட்டம் சற்றே தற்காலிகமாக குறைய தொடங்கியுள்ளது.
இன்றைய நிலவரப்படி தோவாளை மலர் சந்தையில் மலர்கள் விலை (கிலோவில்) வருமாறு:
பிச்சி ரூ.200
மல்லிகை. ரூ.250
கிரேந்தி ரூ.80
செவ்வந்தி ரூ.200
அரளி ரூ.200
சம்பங்கி ரூ.200
வாடாமல்லி . ரூ.60
கனகாம்பரம். ரூ.250
ரோஜா. ரூ.120
மரிக்கொழுந்து ரூ.120
கோழிக்கொண்டை ரூ.60 என்று உள்ளது.







