அமர்நாத் யாத்திரை தொடங்கிய முதல் தற்போது வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பயணம் கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பனிலிங்கத்தை தரிசிக்க செல்லும் பக்தர்களின் முதல் குழுவின் பயணத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இந்த யாத்திரை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. யாத்திரை தொடங்கி 16 நாட்கள் முடிந்த நிலையில், இதுவரை 2,29,221 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் 62 நாட்கள் நடைபெறும் யாத்திரையில், சுமார் 10 லட்சம் பக்தர்கள் பஙகேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



