உளவு பார்க்கிறதா ஆப்பிள் நிறுவனம்? ரஷ்யா எச்சரிக்கை…

அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் போன் மற்றும் இதர சாதனங்களைக் கொண்டு உளவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக ரஷ்யா ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் குற்றச்சாட்டு வைத்துள்ளது. உலகம் முழுக்க மொபைல் போன், கணினி, ஸ்மார்…

அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் போன் மற்றும் இதர சாதனங்களைக் கொண்டு உளவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக ரஷ்யா ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

உலகம் முழுக்க மொபைல் போன், கணினி, ஸ்மார் வாட்ச் போன்ற புதிய வகை தொழில்நுட்பங்களில் ஐஓஎஸ் எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருள், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆன்ராய்டு நிறுவனத்தின் மென்பொருள்கள் பயன்பாட்டில் உள்ளன.

ஆன்ராய்டு மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற மென்பொருளில் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் புதிய வகை அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்கள், அனிமேஷன்கள் போன்றவை குறைவாக உள்ளது என்ற காரணத்தினால் அதிகமான பயனாளர்கள் ஆப்பிள் மென்பொருளுக்கு மாறி விடுகின்றனர்.

ஆப்பிள் மென்பொருள் கொண்டு தயாரிக்கப்படும் ஐபோன், ஐபேட்,  ஐமேக் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்றவற்றில் ஹை செக்யூரிட்டி எனப்படும் பாதுகாப்பு சார்ந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹேக்கர்களால் ஆப்பிள் பயனாளர்களின் சாதனங்களை எளிதில் ஹேக்கிங் செய்ய இயலாது.

இந்த நிலையில், அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த ரஷியா அதிரடி தடை விதித்துள்ளது. ஏற்கெனவே சில அரசு அதிகாரிகள் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது அனைத்து அரசு அதிகாரிகளும் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

ஐபோன்கள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தின் எந்த சாதனத்தையும் பயன்படுத்த வேண்டாம் என ரஷ்ய அரசு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். மேலும், ஐபோன்களுக்கு மாற்றாக வேறு பாதுகாப்பான போன்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் போன் மற்றும் இதர சாதனங்களைக் கொண்டு உளவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக ரஷ்யா ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு பயனர்களின் தனி உரிமை பாதுகாப்பதில் தங்கள் நிறுவனம் கவனமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.