”கண்ணை நம்பாதே”- திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியீடு

”கண்ணை நம்பாதே”- திரைப்படத்தின் முதல் பாடலான  “குறு குறு” பாடலை இன்று மாலை வெளியிட உள்ளதாக ரெட்ஜெயிண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ திரைப்படம்…

”கண்ணை நம்பாதே”- திரைப்படத்தின் முதல் பாடலான  “குறு குறு” பாடலை இன்று மாலை வெளியிட உள்ளதாக ரெட்ஜெயிண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குநர் மு.மாறன் இயக்கும் ’கண்ணை நம்பாதே’ படத்தில் உதயநிதி நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இதனையும் படியுங்கள்: தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன” – ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்

இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு கடந்த மாதம் 26ம் தேதி வெளியிட்டது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ’கண்ணை நம்பாதே’ திரைப்படம் மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “குறு குறு” பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக ரெட்ஜெயிண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.