குறைகிறது போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயது!

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 60…

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 60 ஆக உயர்வு என அறிவிக்கப்பட்டது. 2021 மே 31 ஆம் தேதிக்குள் ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வு வயது பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஓய்வு வயது உயர்வால் போக்குவரத்துத்துறையில் ஒட்டுநர்கள், நடத்துநர்கள் பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. கண் பார்வை கோளாறு, முதுமையினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளால் பேருந்துகளை இயக்கும் போது சிக்கல் ஏற்படுவதால் பலர் விருப்ப ஓய்வு பெற்று செல்வதாகவும், விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகலாம் என்பதால் 58 வயது போதும் என தொழிலாளர்கள் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒய்வு வயதை 58 ஆக குறைப்பதற்கு துறை சார்ந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுசார்ந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.