கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கு; தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு!

கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாதி மறுப்பு திருமணம் செய்ததால் விருத்தாச்சலத்தை சேர்ந்த கண்ணகி…

கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் விருத்தாச்சலத்தை சேர்ந்த கண்ணகி – முருகேசன் தம்பதி கடந்த 2003-ஆம் ஆண்டில் விஷம் கொடுத்து ஆணவக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில் கடலூர் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதில், கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டிக்கு கடலூர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அண்மைச் செய்தி: ‘B.E., B.Tech., B.Arch., மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அறிவிப்பு’

மேலும், கண்ணகியின் தந்தை, உறவினர்கள், உடந்தையாக இருந்த காவல்துறையினர் என 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நிலையில் பின்னர் இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் அமர்வு, மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்து தீர்ப்பளித்தனர். அதே சமயம், கண்ணகியின் தந்தை உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.