முக்கியச் செய்திகள் சினிமா

4 லட்சம் ரசிகர்களை கவர்ந்த தனுஷின் பாடல்!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் ‘நேத்து’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவானவது ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம். இந்த படத்தில் ஐஷ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் Rakita Rakita மற்றும் புஜ்ஜி ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், நடிகர் தனுஷ் எழுதி பாடியுள்ள “நேத்து” என்ற பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. பாடல் வெளியாகி 2 மணிநேரத்திலேயே 4 லட்சத்துக்கும் மேலானவர்களை கவர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக படத்தின் ரிலீஸ் தாமதமான நிலையில், ஜூன் 18ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement:

Related posts

தேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Ezhilarasan

பொங்கல் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Saravana

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

Vandhana