மத்திய அரசின் திட்டத்தில் கனிமொழி எம்.பி. தலைவராக நியமனம்

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக தமிழ்நாடு எம்.பி. கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டி திட்டத்தின் கீழ் நாட்டில்…

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக தமிழ்நாடு எம்.பி. கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமங்களை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டு முன்னேற்றும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

அதன்படி, லோக்சபா எம்.பி.,க்கள் 17 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக எம்.பி., கனிமொழியை நியமனம் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவில் 31 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் ராஜ்யசபாவில், முகமது அப்துல்லா, தினேஷ்சந்திரா ஜெமால்பாய் அனவத்தியா, சாந்தா செத்ரி,
தர்மஸ்தலா வீரேந்திர ஹெக்கடே, ஈரான கடாடி, ரஞ்சீத் ரஞ்சன், நாரம்பாய் ஜே. ரத்வா, ராம் ஷகல், பாசிஸ்தா நரேன் சிங், அஜய் பிரதாப் சிங் ஆகியோரும், லோக்சபாவில் சிசிர் குமார் அதிகரி, சின்ராஜ், ராஜ்வீர் திலர், விஜய் குமார் துபே, சுக்பீர் சிங் ஜான்பூரியா, முகமது ஜாவத், ரீட்டா ஃபுகுனா ஜோஷி, கனிமொழி கருணாநிதி, நளின் குமார் கடீல், நரேந்திர குமார், ஜனார்தன் மிஸ்ரா, ராகவேந்திரா, தலாரி ரங்கய்யா, கீதாபென் வஜேசிங்பாய் ரத்வா, அரவிந்த் கன்பத் சவந்த், மாலா ராஜ்ய லக்ஷ்மி ஷா, விவேக் நாராயண் ஷெஜ்வால்கர், பிரிஜ் பூஷன் சரண் சிங், கும்பக்குடி சுதாகரன், அலோக் குமார் சுமன், ஷியாம் சிங் யாதவ் ஆகிய 31 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

 

இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்தை தத்தெடுத்து வெற்றிகரமாக பணிகளை செய்த வெகு சில எம்.பி-க்களில் கனிமொழியும் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வெங்கடேசபுரம் கிராமத்தை தத்தெடுத்த கனிமொழி, அங்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளில் இருந்து விவசாய குளம் சீரமைத்து கொடுத்தது வரை பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.