முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

’நான் என்ன அரசியல்வாதியா?’ முற்றுகையிட்ட விவசாயிகள், ஆவேசப்பட்ட கங்கனா

தனது காரை முற்றுகையிட்டவர்கள், கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது, நடிகை கங்கனா, விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதி களுடன் ஒப்பிட்டு பேசினார். இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் அவர், தனது சகோதரியின் பிறந்த தினத்தை இன்று கொண்டாட இமாச்சல பிரதேசத்தில் இருந்து பஞ்சாப்புக்கு சென்றார். அவர் கார் புங்கா சாஹிப்பை அடைந்தபோது, ஏராளமான பெண்கள் உட்பட எதிர்ப்பாளர்கள் அவர் காரை தடுத்து நிறுத்தினர். காரின் முன் சாலையை மறித்து அமர்ந்தனர். விவசாயிகளுக்கு எதிரான கருத்துக்கு கங்கனா ரனாவத் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினர்.

அங்கிருந்த பெண்களுடன் பேசிய நடிகை கங்கனா, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார். பின்னர் அவர் மன்னிப்புக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்,போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்த பின்னர் அவர் அங்கிருந்து சென்றார்.

பின்னர் இதுபற்றி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள கங்கனா, நான் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டேன். அவர்கள் என்னை அவமானப்படுத்தினார்கள், கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள். எனக்கு பாதுகாப்பு இல்லை என்றால் என்ன நடந்திருக்கும்? நம்ப முடியாத சூழல் இங்கிருக்கிறது. நான் என்ன அரசியல்வாதியா? இது என்ன மாதிரியான நடத்தை?’ என்று கூறியுள்ளார். தன்னை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதற்காக காவல்துறையினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

டெல்டாவை விட வேகமாக பரவிவரும் ஒமிக்ரான்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Ezhilarasan

முதல் டெஸ்ட் போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்

Arivazhagan CM

அவசரத் தேவைகளுக்காக 200 பேருந்துகள் : அரசு அறிவிப்பு

Halley Karthik