முக்கியச் செய்திகள் சினிமா

கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று!

நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4.01 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 4,187 பேர் நேற்றைய தினத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த டெல்லி, கர்நாடகா, தமிழகத்தில் இரவு ஊரடங்கும், முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் திரைப்பிரபலங்கள் பலரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரபல விளையாட்டு வீரர் சச்சின், நடிகர்கள் அக்‌ஷய் குமார், கத்ரீனா கைஃப், சோனூ சூட் ஆகியோருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தி நடிகையான கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுதொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட தகவலில் ‘ நான் சிறிது சோர்வாக உணர்ந்தேன். மேலும் கண்களில் எரிச்சல் இருந்தது. நான் ஹிமாச்சல பிரதேசத்திற்குப் பயணம் செய்ய இருப்பதால் , கொரோனா சோதனை செய்துகொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனது உடலில்தான் அந்த வைரஸ் இருந்தது என்றே எனக்குத் தெரியவில்லை. ஆனால் விரைவில் அந்த வைரஸை எனது உடலில் இருந்து விரட்டுவேன். இது ஒரு சிறிய காய்ச்சல் மட்டுமே. ஹர ஹர மகாதேவ்.’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்தது சமூக பாதுகாப்பு துறை

Web Editor

தேர்தல் பரப்புரை : முன்னாள் அமைச்சர் மீது வழக்குபதிவு.

Halley Karthik

உத்தரப்பிரதேசம்: ஹத்ராஸ் வழக்கில் 3 பேர் விடுதலை!

Jayasheeba