முக்கியச் செய்திகள் தமிழகம்

தலைமை செயலக முகப்பில் வைக்கப்பட்ட தனது படத்தை நீக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தலைமை செயலகத்தின் முகப்பு கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த தனது புகைப்படத்தை நீக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தியதை அடுத்து படங்கள் அகற்றப்பட்டுள்ளன.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையொட்டி, தலைமை செயலக முகப்பு கட்டடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரது படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டு படங்களையும் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வீண் ஆடம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, முகப்பு கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி ஆகியோரது படங்கள் அகற்றப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஞானவாபி விவகாரம்-மே 26 முதல் விசாரணை

EZHILARASAN D

பிரசாந்த் கிஷோரே வந்தாலும்…பீட்டர் அல்போன்ஸ் ஓபன் டாக்

EZHILARASAN D

அனுமதியின்றி பாஜக ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை கைது

EZHILARASAN D