முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள்: பிரபல நடிகை போலீசில் புகார்

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் வெளியிடுவதாகக் கூறி நடிகை ஸ்வரா பாஸ்கர் போலீசில் புகார் செய்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர். இவர், தனு வெட்ஸ் மனு, சில்லர் பார்ட்டி, தனுஷ் நடித்த ரான்ஜ்னா, தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் தனக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் வருவதாக புகார் கூறியிருந்தார். அது பரபரப்பாகி இருந்தது. இந்நிலையில் இப்போது தன்னைப் பற்றி சமூக வலைதளங் களில் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பரப்பி வருவதாக, டெல்லி வசந்த் கஞ்ச் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், தான் நடித்த பழைய படம் ஒன்றின் காட்சியை மையமாக வைத்து ட்விட்டரிலும் யூடியூப்களிலும் தன்னை பற்றி தவறான கருத்துகளை பரப்பி வருவதாக புகார் அளித்துள் ளார். இதுபற்றி வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், ஸ்வாரா பாஸ்கர் பற்றிய அவதூறு கருத்துகளை வெளியிட்டவர்களின் டிவிட்டர் கணக்குகள் குறித்து, ட்விட்டர் நிறுவனத்திடம் விசாரிக்க உள்ளனர்.

நடிகை ஸ்வரா பாஸ்கர், போதைப் பொருள் வழக்கில் ஷாருக் மகன் கைது செய்யப் பட்டதை அடுத்து அது தொடர்பான கருத்துகளை கடந்த சில நாட்களாக, சமூக வலை தளங்களில் பகிர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

”கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரம் செய்யக்கூடாது”- ஆயுஷ் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Jayapriya

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகல்

Saravana Kumar

20 தொகுதிகளிலும் பாஜகவின் வெற்றி நிச்சயம் – எல்.முருகன்

Gayathri Venkatesan